‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி', பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’…
Read More