24
Jan
ஹர்ஷித் பிக்சர்ஸ் (S R HARSHITH PICTURES) சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, போன்றவற்றை சொல்வதில்லை. பாலியல் குற்றங்களும், அதற்கான பழிவாங்குதல் என்ற பாணியில் மட்டுமே…