27
Oct
வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா இப்படத்தில் நடிக்கிறார். மாஸ் மஹாராஜா ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் இதர படக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், இன்று பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார். நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக…