கதவை திறந்தால் பேய் வரும் ஆனால் பயம் வந்ததா? INSIDIOUS: THE RED DOOR விமர்சனம்

கதவை திறந்தால் பேய் வரும் ஆனால் பயம் வந்ததா? INSIDIOUS: THE RED DOOR விமர்சனம்

  இயக்கம் - Patrick Wilson திரைக்கதை - Scott Teems கதை - Leigh Whannell and Scott Teems based on characters created by Leigh Whannell. அமெரிக்காவில் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பம்பர் ஹிட்டடித்த படம் தான் இன்ஸிடியஸ். தொடர்ந்து நான்கு பாகங்கள் வந்து ஹிட்டடித்த நிலையில் இப்போது 5 ஆம் பாகம் வந்துள்ளது. லேம்பர்ட் குடும்பத்தின் அத்தனை நட்சத்திரங்களும் இறுதியாக ஒருமுறை இந்தப்படத்திற்காக வந்துள்ளனர். இந்தப் படத்தொடரின் ஐந்தாவதும் கடைசியுமான இப்படம், இரண்டாவது பாகமான ‘இன்ஸிடியஸ்: சாப்டர் 2’ படத்தின் தொடர்ச்சியாகத் தொடங்குகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு, மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்கிய நிலையில், ஜோஷ் லேம்பர்ட் (பேட்ரிக் வில்சன்), தன் மகன் டால்டன் லேம்பர்டை (டை சிம்ப்கின்ஸ்), பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் விட்டுவருகிறார். அங்கு மகனுக்கு ஓவியங்கள் மூலம் விநோதமான நிகழ்வுகள் நிகழ்கிறது. தந்தைக்கும் அதே மாதிரி நிகழ்கிறது இருவரும் தப்பித்தார்களா? குடும்பம் இணைந்ததா…
Read More