01
Oct
பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் - திரைக்கதை எழுத்தாளர் - நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், “இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக…