மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்படத்தின்  இயக்குநர் P S மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு !!

மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்படத்தின் இயக்குநர் P S மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு !!

  “சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P S மித்ரன் அவர்களுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார். விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி…
Read More
ஹாட்ரிக் வெற்றியில் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த கார்த்தி !

ஹாட்ரிக் வெற்றியில் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த கார்த்தி !

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக மக்களின் மனம் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம் என…
Read More
தீபாவளி ரேஸில் முந்துகிறது சர்தார்

தீபாவளி ரேஸில் முந்துகிறது சர்தார்

  தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை... என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்.. தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ். கார்த்தியின் டபுள் ஆக்சன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்புல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களை கதையோட்டத்திற்குள் இழுத்து செல்லும். ஜி.வி பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழு திருப்திக்கு நான் கியாரண்டி என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே சர்தார் படத்திற்கான எதிர்பார்ப்பு லெவல் எகிறியதால் இந்தப் படத்தின் வியாபாரத்திலும் அது…
Read More
இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி

இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி

இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி   பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதாவது நடிகர் கார்த்தி பேசும்போது, மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு.. பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது. பக்கத்திலேயே இருக்கும் விஷயத்தை நாம் கவனம் செலுத்தவில்லை. அதை மித்ரன் புரிந்து கொண்டு படத்தை இயக்கியது நம் எல்லோருக்கும் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த படம் எல்லா மொழிகளிலும் நன்றாக ஓடியது. அதிலும் அவர் முதல் படம் என்பதே ஆச்சிர்யபட…
Read More