29
Apr
கதிர் நடிகர்கள்: சந்தோஷ்பிரதாப், வெங்கடேஷ், ரஜினிசாண்டி, ஆர்யாபிரசாத், பாவ்யாடிரிகா இசையமைப்பாளர்: பிரசாந்த்பிள்ளை இயக்குனர்: தினேஷ்பழனிச்சாமி பொறுப்பில்லாமல் சுற்றும் ஒரு இளைஞனின் கேளிக்கை நிறைந்த ஒரு வாழ்கை, பின்னர் போராளி ஒருவரின் கதையை கேட்டு தன் வாழ்கையை எப்படி மாற்றுகிறான் என்பதே கதை. புதுமுகங்கள் நிறைந்து இருக்கும் இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும், தங்களது கதாபாத்திரங்கள் அனைவரது மனதில் பதியும் படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கல்லூரியில் நிகழும் ஹீரோவின் காதல் காட்சிகள் பார்ப்பதற்கு ரசிக்கும் படி தான் அமைந்துள்ளது. கதாநாயகியின் ஸ்கீரின் பிரசன்ஸ் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. படத்தில் நிறைய துணை கதாபாத்திரங்கள் படத்தை தங்களது தோளில் சுமந்து செல்கின்றனர். கிராமத்தில் ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களும், நகரத்தில் ஹீரோக்கு உறுதுணையாக இருக்கும் ஹவுஸ் ஓனர் பாட்டியும் காட்சியை சுவாரஷ்யமாக்குவதோடு, மனதில் பதியும் படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இசை படத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறது. ரசிக்கும்படியான ஒன்றாய் அமைந்துள்ளது. இயக்குனருக்கு முதல் படம் போல்…