“புளூ ஸ்டார்” ஃபேமிலி எண்டர்டெயினர் !!

“புளூ ஸ்டார்” ஃபேமிலி எண்டர்டெயினர் !!

  அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "புளூஸ்டார்" லெமன்லீப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம். அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் 'புளூஸ்டார்' அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம். இந்தப்படம்…
Read More
முருங்கைகாய் காட்சி மூன்று முறை எடுத்தேன் – முருங்கைகாய் சிப்ஸ் படவிழாவில் பாக்யராஜ் !

முருங்கைகாய் காட்சி மூன்று முறை எடுத்தேன் – முருங்கைகாய் சிப்ஸ் படவிழாவில் பாக்யராஜ் !

Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய.... நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது... நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும் ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம், நீண்ட காலமாக படம்…
Read More