நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருது.நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கல்லூரி படிப்பை முடிச்சுப்புட்டு ஃபாரீனில் தற்போது சினிமா இயக்கத்தில் கவனம் செலுத்தி வாறார். தனது மகன் சஞ்சய்க்கு நடிப்பை தாண்டி படங்களை இயக்குவதில்தான் ஆர்வம் இருப்பதாக நடிகர் விஜய் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் தெரிவிச்சிருந்தார். இந்நிலையில், ஜேசன் சஞ்சய் ‘புல் தி ட்ரிக்கர்’ என்ற குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் சமீபத்தில் யூடியூபில் வெளியானது. இந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருது. விஜய் ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இயக்கம் குறித்த முழுமையான பயிற்சிக்கு பிறகே அவர் இயக்குநராக களமிறங்குவார் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Read More