25
May
``நடிகர் கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்' கதையைக் கேட்டார் அந்த கதை பிடித்து போனதும் உடனே அதில் நடிக்க சம்மதித்தார். இந்த படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்துள்ளார் . படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில்…