ஏலே பட விளம்பரத்துக்காக நிஜமாக குச்சி ஐஸ் விற்ற சமுத்திரகனி!

ஏலே பட விளம்பரத்துக்காக நிஜமாக குச்சி ஐஸ் விற்ற சமுத்திரகனி!

28 ஜனவரி 2021 : ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள “ஏலே” படத்தில் நடிகர் சமுத்திரகனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் “முத்துகுட்டி” எனும் கலகலப்பான மனிதராக நடிக்கிறார். படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் முதுகுட்டி கதாப்பாத்திர தோரணையில், மக்கள் புழங்கும் திருத்தணி முருகன் கோவில் முன்னால் ஏலே ஐஸ் வண்டியில் ( ஐஸ் நிறைந்த குளிரூட்டப்பட்ட வண்டி ) “குச்சி ஐஸ்” விற்பனை செய்துள்ளார். நகரம் முழுதும் முருக கடவுளின் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்தில் குழுமியிருக்க, மக்களுக்கு படத்தை பற்றிய அறிமுகத்தை கொண்டு செல்லும் பொருட்டு படக்குழு இவ்விடத்தை தேர்ந்தெடுத்து இந்த விளம்பரத்தினை செய்துள்ளது. சமுத்திரகனி ஐஸ் விற்பதை கண்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். நடிகர் சமுத்திரகனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார். இதனை தொடர்ந்து இதே மாதிரியான…
Read More
S.A.சந்திரசேகரின் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் சமுத்திரகனி!

S.A.சந்திரசேகரின் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் சமுத்திரகனி!

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” . இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக…
Read More