08
Nov
இதற்கு முன்பு பார்த்திராத அதிதீவிரமான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ‘யசோதா’ படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது யூ/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்று உள்ளது. வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய கதை! கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கக்கூடிய ‘யசோதா’ திரைப் படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்து இருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் சினிமாத் துறையில் 40 வருடங்களாக இருக்கிறார். நேரடித் தெலுங்கு படங்கள் உட்படப் பல மொழிமாற்றம் செய்த நாற்பத்தைந்திருக்கும் மேற்பட்டப் படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களையும் அவர் தயாரித்து…