11
Sep
பார்வையாளர்களை பரவசப்படுத்தும் அதர்வாவின் Trigger டிரைலர்! பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் படம் 'டிரிக்கர்'. இதன் நாயகன் அதர்வா. நாயகி தான்யா ரவிச்சந்திரன். இசை ஜிப்ரான். இயக்கம் சாம் ஆன்டன். செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி கூறியதாவது: "பிரபு தேவா நடித்த 'லஷ்மி', மாதவன் நடித்த 'மாறா' போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு நாங்கள் தயாரிக்கும் படம் 'டிரிக்கர்'. எங்களுடைய முந்தையப் படங்களை மென்மையான கதைக் களத்தோடு தயாரித்தோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தனிப்பட்ட விதத்தில் எனக்கு சண்டை படங்கள் அதிகம் பிடிக்கும். எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்புக்காக கதைகளை கேட்டபோது இயக்குநர் சாம் ஆன்டன் சொல்லிய கதை பிடித்திருந்ததால் உடனே தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தோம். அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளோம். இந்தப் படம் அதர்வா சினிமா…