சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமிர் கான் இணையப்போகும் படம் !!

சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமிர் கான் இணையப்போகும் படம் !!

'லால் சிங் சத்தா' படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை இதனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆமிர் கான் படங்களில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார். தனது குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட இந்த பிரேக் தேவைப்படுகிறது என்று ஆமிர் கான் தெரிவித்திருந்தார். அதோடு நடிகர் சல்மான் கானை வைத்து 'சேம்பியன்ஸ்' என்ற படத்தைத் தயாரிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார். பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமிர் கான் ஆகியோர் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கின்றனர். அவர்கள் இடையே தற்போது நல்ல உறவு நீடித்து வருகிறது. சமீபத்தில் மூன்று பேரும் நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமிர் கான் எப்போதும் சொன்ன சொல்லைக் காப்பாற்றக்கூடியவர். அவர் சொன்னபடி சரியான நேரத்திற்கு வந்துவிட்டார் என்கிறார்கள். ஆனால் ஷாருக்கானும், சல்மான் கானும் 'டைகர் 3' படப்பிடிப்பிலிருந்தனர். படப்பிடிப்பை முடித்துவிட்டே இருவரும் வந்திருக்கின்றனர். அதன் பின்னர், அவர்கள் மூன்று பேரும்…
Read More
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

அபுதாபியில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) சார்பில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் நடக்குது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். இதில் சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபங்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருதை வழங்குவதாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி தெரிவித்துள்ளது . நடிகை ஜெனிலியா…
Read More
சுதந்திரமாக சைக்கிள் கூட ஓட்ட முடியவில்லை என்று நடிகர் சல்மான் கான் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

சுதந்திரமாக சைக்கிள் கூட ஓட்ட முடியவில்லை என்று நடிகர் சல்மான் கான் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

  பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறது. ராஜஸ்தானின் படப்பிடிப்புக்கு சென்ற போது அரிய வகை மான்களை வேட்டையாடியதால் கைது செய்யப்பட்டு கோர்ட்டால் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்டையாடிய மான்கள் பிஷ்னோய் இன மக்களால் புனிதமாகக் கருதப்படக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோயிடமிருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சல்மான் கானுக்கு மும்பை போலீஸார் ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சல்மான் கான் தனது பாதுகாப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இதனை பற்றி நடிகர் சல்மான் கான் கூறுகையில், பாதுகாப்பற்று இருப்பதை விட பாதுகாப்புடன் இருப்பது மேல். இப்போது பாதுகாப்பு இருக்கிறது. என்னால் சுதந்திரமாக ரோட்டில் சைக்கிள் கூட ஓட்ட முடியவில்லை. என்னால் வெளியில் தனியாக செல்ல முடியவில்லை. நான் வெளியில்…
Read More