19
Dec
தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடல்ட் நடிகை ஷகிலா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் “ஷகிலா”. இந்தி மொழியில் எடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் கலந்துகொண்ட, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் தம்பி ராமையா கூறியதாவது.... வழக்கமாக பயோபிக் எடுப்பது என்பதே கடினமானது. நிறைய உழைப்பு தேவைப்படும். ஷகிலாவின் படம் எடுப்பது இன்னும் கடினமானது. படத்தில் ஒரு காட்சியில் “நான் திரைக்கு வெளியே யாரையும் ஏமாற்றுயதில்லை” என்று ஷகிலா சொல்வதாக ஒரு வசனம் வரும் அது நூறு சதம் உண்மை. நிஜத்தில் அவர் மிக இளகிய மனம் கொண்டவர். அது தான் அவர் வெற்றி பெற மிகப்பெரும் காரணம். இப்படம் பல மொழிகளில் வெளியாகிறது. “மாஸ்டர்” படம் தியேட்டருக்கு ரசிகர்களை இழுத்து வரும்…