09
Mar
ஈரம் படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் “சப்தம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம் “சப்தம்”. தமிழ் சினிமாவில் “ஈரம்” படம் மூலம் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இந்த வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக நடிகை லக்ஷ்மி மேனன் ஒப்பந்தமானதை அடுத்து தற்போது முக்கிய பாத்திரமொன்றில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். இணைந்துள்ளார். காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் இனிதே நிறைவு செய்தனர். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் ஆதி, லக்ஷ்மி…