10
May
அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சாணி காயிதம்' படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. அதே போல், அவரது இசையில் உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை…