டிராஃபிக் ராமசாமி ‘டீசர் – சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டார் !

டிராஃபிக் ராமசாமி ‘டீசர் – சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டார் !

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ்.  இன்று மாலை 6 மணிக்கு வெளி யிட்டிருக் கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் கூறும் போது , “டிராஃபிக்  ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சை யாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=Ea7KESiZSP4&feature=youtu.be துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப் படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்.” என்று பாராட்டி வாழ்த்தினார். இப்பட த்தில் கதை நாயகனாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார்.…
Read More