07
Feb
தமிழ் சினிமாவில் பிளாக்லஸ்டர் வெற்றியை பெற்ற சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில் RK சுரேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பு துறையில் கால்பதித்து சிறு சிறு வேடங்கள் மூலம் நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது காடுவெட்டி குரு உட்பட சில படங்களில் நாயகனாக நடித்து நேற்று பிறந்த நாள் கொண்டாட்ட அறிவிப்பாக தான் நடிக்கும் அடுத்த படத்தை அறிவித்துள்ளார். நடிகர் விஜயகாந்த் நடிப்பில், தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்ற சின்ன கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சின்ன கவுண்டர் படத்தை இயக்கிய, RV உதயகுமார் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜயகாந்த் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் சின்ன கவுண்டர் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமென்று கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.