என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்! – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்! – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

நான் 'எல்.கே.ஜி' ஆரம்பிக்கும்போது முதலில் அரசியல், அடுத்து ஆன்மீகம், அடுத்து பொருளாதாரம், கல்வி இப்படி போகலாம் என்று தான் தோன்றியது. எனக்கும் அப்படித்தான் பிடிக்கும். யூகிக்கும் வகையிலான படங்கள் இனிமேல் பண்ணக் கூடாது. பார்வையாளர்களுக்கு முன் நான் விழிப்புணர்வாக இருந்தால் தான் உடனே மாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்திருக்கும்போது தான் 'ரன் பேபி ரன்' பட வாய்ப்பு வந்தது. ஆர்.ஜே.பாலாஜியா? இவர் எப்போதும் நகைச்சுவை படம் தான் எடுப்பார் என்று எண்ணும்படி இருக்கக் கூடாது. என்னை நாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஆர்.ஜே.பாலாஜி படம் என்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் வர வேண்டும். இந்த கதை கேட்கும்போது அதுதான் தோன்றியது. ஒரு வருடம் முன்பு, நான் கதை கேட்கும் முன்பே படப்பிடிப்பிற்கு செல்லும் அளவு அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்த கதை கேட்டு பிடித்து சம்மதம் சொன்னதும் படப்பிடிப்பிற்கு சென்று விட்டோம். அதேபோல், இயக்குநர் என்ன கதை கூறினாரோ? அதை அப்படியே தான் எடுத்திருக்கிறார்கள்.…
Read More