19
Sep
Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில், இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இவ்விழாவினில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு விழக்கேற்றி படக்குழுவினரை வாழ்த்தினார். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பேசியதாவது… இங்கு வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி, வந்துள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள், இந்தப் பூஜையை விளக்கேற்றி துவக்கி வைத்த என் தந்தைக்கு நன்றி. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன் நன்றி. கதாநாயாகன் விஜய்விஷ்வா பேசியதாவது .. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். சாரா திரைப்படத்தின் பூஜைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. கார்த்திக்ராஜாவின் இசையில் நான்…