02
Jun
ZEE5 தனது பார்வையாளர்களை மகிழ்விக்க மற்றொரு ஒரிஜினல்களுடன் மீண்டும் வந்துள்ளது. "ஃபிங்கர்டிப்" க்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனுடன் மீண்டும் வந்துள்ளனர், "ஃபிங்கர்டிப்" இரண்டாவது சீசன் ஜூன் 17, 2022 முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபிங்கர் டிப் இரண்டாவது சீசன் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் ஆகும். டிஜிட்டல் தளம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சக்தி, நம் விரல் நுனியில் எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றி வரும் ஒரிஜினல் சீரிஸ் இது. டிஜிட்டல் உலகில் முக்கியமாக இருக்கும் ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த தொடர் ஒரு பக்க சார்பான கருத்துடன் மட்டும்…