07
Nov
ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு 'டைகர் நாகேஸ்வர ராவ்' என பெயரிடப்பட்டுள்ளது ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார். இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். மாஸான இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவி தேஜா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி வருகிறார். இப்படத்தில் அவரது உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றம் முன்னெப்போதிலும் இல்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். படத்தை…