உருவாக இருக்கிறது `7ஜி ரெயின்போ காலனி 2′

உருவாக இருக்கிறது `7ஜி ரெயின்போ காலனி 2′

செல்வராகவன் - யுவன் - நா.முத்துக்குமார் என ஜாம்பவான்கள் சேர்ந்து உருவாக்கியப கிளாஸிக் படம் '7ஜி ரெயின்போ காலனி'. இப்போது அதனுடைய இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி அடைந்த படம், `7ஜி ரெயின்போ காலனி'. `காதல் கொண்டேன்' வெற்றிக்குப் பிறகு, செல்வராகவன் கொடுத்த கிளாஸிக் இது. செல்வாவைப் பிடித்த எல்லோருக்கும் 7ஜியை நிச்சயம் பிடித்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், செல்வராகவனை தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் இணைத்த படம். படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றன. ஆனாலும், 7ஜியின் தாக்கம் குறையவில்லை. ரவி கிருஷ்ணா - சோனியா அகர்வால் காட்சிகள் இன்றைக்கும் இன்ஸ்டாவில் சுழலும் லவ் கன்டென்டுகள். தவிர, ரவி கிருஷ்ணா கிரிக்கெட் விளையாடும் காட்சி, 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலை குரூப்பாக பாடி அட்ராசிட்டி செய்யும் காட்சி ஆகியவை மீம் மெட்டீரியல்கள். "பின்ன, ஹீரோ ஹோண்டால…
Read More
error: Content is protected !!