சினிமா டிக்கெட் கட்டணம் ஜிவ்..!: ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா டிக்கெட் கட்டணம் ஜிவ்..!: ரசிகர்கள் அதிர்ச்சி

தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கிடுகிடு என உயர்ந்துள்ளது. நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி., கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. சினிமாவை பொருத்தமட்டில் தியேட்டர் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 18 மற்றும் 28 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. கூடுதலாக தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவீதம் விதிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பின் அந்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. கேளிக்கை வரி தொடர்பாக அரசு சார்பில் ஒரு குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டதில் 30 சதவீதம் கேளிக்கை வரியை, 10 சதவீதமாக குறைத்து அரசு உத்தரவிட்டது. இதற்கும் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 38 (28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 10 சதவீத கேளிக்கை வரி) சதவீத வரியை எங்களால் செலுத்த முடியாது என கூறி நேற்று…
Read More