“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட விமர்சனம்

“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட விமர்சனம்

இந்திய தலைநகர் டெல்லியில் 2012ல் நடந்த நிர்பயா பாலியல் கூட்டு வன்புணர்வு, 2017 உன்னாவ் சிறுமி கூட்டு வன்புணர்வு, 2018 கத்துவா சிறுமி கூட்டு வன்புணர்வு, 2019 ஹைதராபாத் கால்நடை மருத்துவர் வன்புணர்வு, 2020 ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு இவையெல்லாம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான பாலியல் குற்றங்களின் கொடூரமான யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தினமும் சராசரியாக 95 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவானதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau-NCRB) தரவுகள். அதே ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உட்பட பதிவான வழக்குகள் 5 லட்சத்துக்கு அதிகம். இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் NCRB சொல்கிறது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 28,046 (தினப்படி சராசரி 81) வன்புணர்வு வழக்குகள் பதிவானதாக சொல்லும்…
Read More