18
Feb
தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 2000, பிப்ரவரி 18 அன்று வெளியான ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி இன்னியோட 24 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இப்படம் வெளியானபோது விமர்சகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது. அன்று முதல் இன்றுவரை அப்படம் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டுவருகிறது. காந்தியின் கொலைக்குப் பின்னால் இயங்கிய சித்தாந்தத்தை அம்பலப் படுத்தியதற்காகப் படத்தைப் பலர் பாராட்டினார்கள். இது ‘இந்துத்துவத்துக்கு எதிரான படம்’ என்றும் ‘இந்துத்துவ ஆதரவுப் படம்’ என்றும் இருவேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அடித்தளமிடும் சித்தாந்தம் எப்படி இயங்குகிறது, வெறுப்பு எப்படித் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது, இவற்றால் பயன் பெறக்கூடிய அரசியல் தரப்பினர் யார் என்பதையெல்லாம் விரிவாக விளக்கிய படம் ‘ஹே ராம்’. வாள்களும் துப்பாக்கிகளும் வெறும் கருவிகள்; அவற்றைப் பின்னாலிருந்து இயக்கு பவை வெறுப்பை ஊக்குவிக்கும் சித்தாந்தங்களும் கதையாடல்களுமே என்பதை வலியுறுத்துவதைக் காணலாம். எழுத்தில் வடித்தாலே தவறாக புரிந்துகொள்ளப்படும் மிகவும் சிக்கலான காலகட்டத்தை…