18
Dec
நடிகர் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்க்த்தில் உருவாகியுள்ள பிரம்மாஸ்த்ரா படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் SS.ராஜமௌலி வழங்குகிறார் இது குறித்து SS.ராஜமௌலி கூறுகையில், பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது, இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து உங்கள் மனதைக் கவரும் வைகையில் உருவாக்கபட்டுள்ளது! எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக…