27
Nov
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் புரமோசனுக்காக சென்னையில் பத்திரிக்கையாளர்களை படக்குழு சந்தித்தனர், இந்நிகழ்வினில்.. நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது.. இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம். நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இந்தப்படம் பொறுத்தவரை நான் செய்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர்…