ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. Noise and Grains தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் “கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடலின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த ஆல்பம் பாடல் “தோட்டா”. இப்பாடலை பிரேம்ஜி, நித்யஶ்ரீ பாடியுள்ளனர். இப்பாடலில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். நேற்று இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் பிக்பாஸ் புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா, உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். Noise & Grains சார்பில் கார்த்திக் பேசியதாவது.. கண்ணம்மா பாடல் மிகப்பெரிய வெற்றி…
Read More
“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” பட ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” பட ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகி யிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. அமேசான் பிரைம்- சமீபத்திய திரைப்படங்கள், பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்டப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், விளம்பரம் இல்லாமல் இசையை கேட்பதற்கான அமேசான் பிரைம் மியூசிக்.. இவையெல்லாம் இலவசமாகவும், விரைவாகவும் வழங்குவதற்கான வினியோக கட்டமைப்பு, புதிய பார்வையாளர்களை சென்றடைவதில் எளிதான அணுகுமுறை ஆகியவற்றை நம்ப முடியாத வகையில் அமேசான் வழங்கிவருகிறது.…
Read More