04
Oct
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடைய மகளும், நடிகர் தனுஷ் உடைய மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தமிழில் ஒரு இயக்குனராக இருக்கிறார். தனுஷ் நடிப்பில் 2012-ல் 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் “ வை ராஜா வை “ திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பிரம்மாண்ட படங்களையும், பல முக்கிய படங்களையும் தயாரித்து வரும் லைகா நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தினை பற்றி அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2015-ம் ஆண்டிற்கு பிறகு, ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக கலமிறங்கும் படம். முக்கிய படங்களையும், முன்னணி நடிகர்களையும் வைத்து, படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், இப்போது ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்துள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய…