21
Nov
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள '' ராஜ வம்சம் " படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை . நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C . அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு . இந்த படத்தில் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி , யோகி பாபு ,கும்கி அஸ்வின் ,ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி ,ரமணி , ராஜ் கபூர் ,தாஸ் , நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா…