19
Oct
நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பான ‘பிரமயுகம்’ அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரமயுகம்’ ஆகஸ்ட் 17, 2023 முதல் ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட படக்குழு இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மிக விரைவில் படத்தின் மார்க்கெட்டிங் பணிகளைத் தீவிரமாக தொடங்கவுள்ளது. 'பிரமயுகம்' மிகவும் எதிர்பார்க்கப்படும் பன்மொழி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மம்முட்டியின் தோற்றம் அடங்கிய போஸ்டர் செப்டம்பரில் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக, மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான 'கண்ணூர் ஸ்காவ்ட்' படம் வெற்றிப் பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க…