ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் கதாநாயகி தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!

ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் கதாநாயகி தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக கத்ரீனா கைப் உடன் அவர் நடித்து வரும் மெரி கிறிஸ்துமஸ் படம் மீது பெரிய எதிர்பார்த்து இருந்து வருகிறது. தனது திரைப்பயணத்தில் இது அவருக்கு ஒரு முக்கிய படமாக இருக்கும். ஸ்ரீராம் ராகவன் இயக்கி வரும் அந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞனாக நடித்து இருக்கிறார். தனது ஏதார்த்தமான நடிப்பினால் இயக்குனரை வெகுவாக கவர்ந்துள்ளாரம். மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா ஆப்தேவும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறார். அது சின்ன கெஸ்ட் ரோல் மட்டும் தான் என கூறப்படுகிறது. ஏற்கனவே ராதிகா ஆப்தே தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Read More