ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. Noise and Grains தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் “கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடலின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த ஆல்பம் பாடல் “தோட்டா”. இப்பாடலை பிரேம்ஜி, நித்யஶ்ரீ பாடியுள்ளனர். இப்பாடலில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். நேற்று இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் பிக்பாஸ் புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா, உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். Noise & Grains சார்பில் கார்த்திக் பேசியதாவது.. கண்ணம்மா பாடல் மிகப்பெரிய வெற்றி…
Read More