இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER ( saala Crossbreed )படத்தில் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரமாண்டமாக உருவாக்கிவருகிறார். மொத்த படக்குழுவிற்கும், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கும், மற்ற அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியமான படமான இந்த படம் இருக்கும்.   அகிலம் அதிரும்படியான ஒரு அட்டகாச தகவலை LIGER படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு மிகபெருமையுடன் கூறுவது என்னவென்றால், இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த ஒரு நபர், யாராலும் அசைக்கமுடியாத ஜாம்பவான், மைக் டைசன், பெருமைமிக்க பன்மொழி திரைப்படமான LIGER படத்தில் இணைகிறார். ஆம், நீங்கள் இப்பொழுது வாசித்தது சரி தான். மிகவும் ஆக்ரோஷம்…
Read More
விஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…!

விஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…!

படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு ! தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்குகொள்ள, படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு, எதிர்பாராத சிறப்பு விருந்தினர் வந்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நரசிம்மா நந்தமூரி பாலகிருஷ்ணா படப்பிடிப்பை பார்வையிட்டு குழுவினரை வாழ்த்தியுள்ளார். அவர் நடிக்கும் Akhanda படத்தின் படப்பிடிப்பும் கோவாவுக்கு அருகில் தான் நடைபெற்று வருகிறது. படத்திற்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட செட்டை…
Read More