29
Oct
ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே எஸ்ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர்என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை பிரமாண்ட பொருட்செலவில்தயாரிக்கவுள்ளார். வெற்றிப்பட இயக்குநரான கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இதுவரைஏற்றிராத மாஸான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க, எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன், கலகலப்பான காமெடி, மனதைத் தொடும் எமோஷன் நிறைந்த இந்த புதியதிரைப்படத்திற்காக கே எஸ் ரவிக்குமார், ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் முதல் முறையாக இணைகின்றனர். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில்தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.…