18
Sep
திரையுலகின் திறமைமிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமா யுனிவர்ஸில் முதல் திரைப்படமாக உருவாகும் திரைப்படம் ஹனு மான். இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் இப்படம் தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சில உயர்தர VFX காட்சிகள் உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க வேண்டுமென படம்குழு தீவிர கவனம் எடுத்து உழைத்து வருகிறது. டீஸர் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டுமென்பதில் படக்குழுவினர் தெளிவாக உள்ளனர். இதற்கிடையில் ஹனு மான் தயாரிப்பு தரப்பிலிருந்து ரசிகர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பண்டிகை கொண்டாட்டமாக ஒரு கச்சிதமான போஸ்டரை வெளியிட்டு, படத்திற்கான விளம்பரங்களைத் தொடங்கியுள்ளனர். இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு மாறுபட்ட பாரம்பரிய அவதாரத்தில் தோன்றுகிறார், மேலும் அவர் விநாயக சதுர்த்தி விழாவை,…