16
Feb
ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமான தளமாக இருந்து வருகிறது. ஜீ5 உடைய அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள "விலங்கு" என்ற ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது. இதன் வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் நடிகர் பாலசரவணன் பேசியதாவது… நான் நடித்த படங்களில் என்னை பற்றி எழுதி ஆதரவளித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. விலங்கு தொடர் எனக்கு முக்கியமானது. பிரசாந்த் எனக்கு உயிர் நண்பன், அவனிடம் காமெடியனாக நடிக்கிறேன், குணசித்திரத்தில் நடிக்க வேண்டும் என சொன்னேன், அப்போது தான் இந்தக்கதை சொல்லி இதில் வரும் கதாப்பாத்திரத்தில் நடிக்க சொன்னான். ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய பாத்திரம் என்னை நம்பி கொடுத்த…