நவரச நாயகன் கார்த்திக் பர்த் டே!

நவரச நாயகன் கார்த்திக் பர்த் டே!

கோலிவுட்டோ, பாலிவுட்டோ எல்லா சினிமா உலகிலும் எம்புட்டோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மாத்திரமே தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனசில் நீங்கா இடம் பிடிச்சிருக்காய்ங்க. அவர்களில் முக்கியமான நடிகர் நவரச நாயகன் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டாலும் பிற்காலத்தில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர். துறுதுறு சிட்டி பாய், கிராமத்து இளைஞன், அப்பாவி, சீரியஸ் கேரக்டர், காமெடி ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடை, உடை, பாவனை, தோரணை என அனைத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தக்கூடிய அசாத்திய திறமை கொண்ட நடிகரிவர் இதுவே இவரது வெற்றிக்கு சான்று. கொஞ்சூண்டு விரிவா சொல்றதானா முத்திரை என்பது சினிமாவில் மிக எளிதாகச் செஞ்சிடும் காரியம். இரண்டு மூன்று படங்களிலேயே ‘இந்த நடிகர் இப்படி நடிப்பதற்கானவர்’ அப்படீன்னு முத்திரை குத்திப்புடுவாய்ங்க ரசிகர்கள். ஆனால், அவரை ‘அமுல்பேபி’ என்று கொண்டாடிக்…
Read More
இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

”கா….கா….கா….கா..”; ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘இன்று போய் நாளை வாராய்…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ போன்ற பாடல்களில் அதன் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி இன்றும் வசீகரிக்க வைக்கும் சி.எஸ்.ஜெயராமனின் குரல். தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான். ஆம் இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான ஒரு இசைக்கலைஞர், இசையமைப்பாளர்… (சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…) (அவர் தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக இசையில் புகழ் பெற்றவர்… மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மைத்துனர் CSJ என்பது அவருக்கான இன்னொரு அறிமுகம் … ). 1950-60 களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்…
Read More