08
Oct
கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” விரைவில் திரையில் !! நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது. ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கதையினை கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான…