குற்றசாட்டுக்கு பதிலளித்த பார்வதி நாயர்

குற்றசாட்டுக்கு பதிலளித்த பார்வதி நாயர்

நடிகை பார்வதி வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பாக உருவான சர்ச்சைக்கு நடிகை பார்வதி நாயர் மறுப்பு தெரிவித்துள்ளார்.. அவர் கூறியாதவது... அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே...! கடந்த வாரத்தில் என்னை பற்றிய ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட கட்டுரைகளும், காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையை பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையை புரிய வைப்பதற்கும் இந்த செய்தி குறிப்பை வெளியிடுகிறேன். எனது உடைமைகள் திருடப்பட்டதால் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 20. 10. 2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றி வருகிறேன். மேலும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளை பெறுவதற்காக சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன். சுபாஷ் சந்திர போசை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி…
Read More