25
Apr
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.இரஞ்சித் தயாரிப்பில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்டோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்திய சமூகத்தில் விஷமாகப் பரவி இருக்கும் சாதிய கொடுமைகளைக் கேள்விக்குட்படுத்தி சமத்துவத்தைப் பேசிய இப்படம் நல்ல விமர்சனங்களையும், மக்களிடையே நல்ல வரவேற்ப்பைபையும் பெற்றிருந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கரண் ஜோஹர் இப்படத்திற்கான ரீமேக் உரிமைத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலிவுட் நடிகர்களான சித்தார்த் சதுர்வேடியும், டிரிப்டி டிமிரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியில் ரீ-மேக்காகும் இப்படத்தில் முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதன் பின்னணியில் சாதிய முரண்பாடுகள் பற்றி பேசுவதாக இருக்கும்' என தெரிவித்திருக்கிறது.