24
Jan
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், விக்னேஷ் SC போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது. வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து கதை பின்னப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்தி கொள்ளும் வகையான கதையில், ஃபேண்டஸி கலந்த ஒரு அட்டகாசமான நகைச்சுவைப்படமாக இப்படம் இருக்கும். படம் குறித்து கோபி - சுதாகர் கூறியதாவது.. இந்தகதையை கேட்டவுடனே இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது எனப் புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் தான் படத்திலும் இருக்கும் ஆனால் அதோடு ஃபேண்டஸி கலந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் பொழுது போக்கும் இப்படத்தில் இருக்கும். யுடூயூப் வீடியோக்களில் சிரிக்க…