ஊமைச் செந்நாய் படத்திற்காக கண்டெய்னருக்குள்ளேயே படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி

ஊமைச் செந்நாய் படத்திற்காக கண்டெய்னருக்குள்ளேயே படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி

LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரித்துள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் வெளியாகும் இவரது முதல் படம் இது. குற்றம் கடிதல் படத்தில் நடித்த சாய் ராஜ்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தெகிடி, தலைவி படங்களில் கவனம் ஈர்த்த ஜெயக்குமார், எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை கல்யாண் வெங்கட்ராமன் கவனித்துள்ளார். இவர் சிபிராஜ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ரேஞ்சர் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஏ.ஆர்.ரகுமானின் கேஎம் இசைப்பள்ளி மாணவரான சிவா இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அதுல்…
Read More