பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. காவிய படைப்பான 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் பார்வையாளர்களை விசேஷமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 'ஆதி புருஷ்' படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காவிய படைப்பான 'ஆதி புருஷ்' படத்தை ஓம்ராவத் இயக்கியிருக்கிறார். இதனை டிசீரிஸ் பூஷன் குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பிரம்மாண்டத்தையும் மகத்துவத்தையும் பொருத்து முன்னோட்ட வெளியீட்டு விழா கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் நீடித்தது. இந்த முன்னோட்டம் முதலில் ஹைதராபாத்தில் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் பிரம்மாண்டமான வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னணி நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 'ஆதி புருஷ்'…
Read More