பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ‘பருவு’ சீரிஸை வெளியிட்டது  ZEE5 தமிழ்!

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ‘பருவு’ சீரிஸை வெளியிட்டது ZEE5 தமிழ்!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான ​​"பருவு" சீரிஸை பெருமையுடன் அறிவித்துள்ளது. ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர். சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளரான சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர். கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும் காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை…
Read More
error: Content is protected !!