12
Nov
கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் - அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது. ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பத்திரிகை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து சில துளிகள் இங்கே… நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டு தான்…