’விபிஎப் கட்டண விவகாரம் : நோ நியூ மூவி ரிலீஸ் – பாரதிராஜா அதிரடி!

’விபிஎப் கட்டண விவகாரம் : நோ நியூ மூவி ரிலீஸ் – பாரதிராஜா அதிரடி!

நாடெங்கும் உள்ள மக்களை முடக்கிப் போட்டுள்ள கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் பத்தாம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கைகள், பார்வையாளர் களுக்கு முகக்கவசம், ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் கிருமிநாசினி கொண்டு திரையரங்கை சுத்தப்படுத்துவது உள்பட ஒரு சில நிபந்தனைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இப்படி 7 மாதங்களுக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படுவதால் இதுவரை வெளி வராமல் முடங்கிக் கிடக்கும் பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் விபிஎப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என நடப்பு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜ திடீரென அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா இது குறித்து மேலும் கூறியபோது ’விபிஎப் கட்டணங்களை திரையரங்க உரிமையாளர்களே செலுத்த வேண்டுமென்றும் டிஜிட்டல்…
Read More