நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது புகார் !

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது புகார் !

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்து, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளிச்சிருக்கார். அந்த புகார் மனுவில், மரியாதைக்குரிய காவல் உயர் அதிகாரிகளுக்கு., நாடெங்கும் உள்ள ரவுடிகளை ஒடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து…
Read More
ஆண்டவன் கட்டளை படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் -நயன் தாரா & விக்னேஷ் தயாரிக்கிறார்கள்

ஆண்டவன் கட்டளை படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் -நயன் தாரா & விக்னேஷ் தயாரிக்கிறார்கள்

சுப யாத்ரா - ஆண்டவன் கட்டளை படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் மூலம் Rowdy Pictures சார்பில் நயன் தாரா & விக்னேஷ் சிவன் குஜராத் மொழியில் தயாரிப்பாளர்களாக தங்கள் பயணத்தை துவங்குகிறார்கள். Rowdy Pictures தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் நிறுவனம் மூலம் தரமிக்க படங்களை வழங்கி பெரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் மேலும் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது இந்த தயாரிப்பு நிறுவனம், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, தமிழ் திரைப்படமான ஆண்டவன் கட்டளையின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘சுப் யாத்ரா’ மூலம் குஜராத்தி சினிமாவில் அதன் பயணத்தை துவங்கவுள்ளது. இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தை குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான…
Read More
ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

இயக்கம்: சிவா நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜகபதிபாபு, இசை: டி. இமான் கதை - கிராமத்து ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். உயிருக்குயிரான தங்கை கீர்த்தி சுரேஷ். அவருக்கு ஊரெல்லாம் தேடி மாப்பிள்ளை பார்க்க்கிறார் ரஜினி.  அப்போதுதங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் வரும்பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. தமிழ் சினிமாவில் பாசமலர் காலத்திலிருந்து  அடித்து துவைத்த அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதைக்கு கொஞ்சம் புதுப்பெயிண்ட் அடித்து ரஜினி மசாலாவை பூசித் தந்திருக்கிறார்கள் ஆனால் காலம் மாறி பல காலமாகிவிட்டதை மறந்து விட்டார்கள். ஊர் பஞ்சாயத்து தலைவராக மக்கள் மவுசுடன் துள்ளலாக திரிகிறார் ரஜினி. படித்துவிட்டு ஊருக்கு வரும் கீர்த்திக்கு மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு கட்டத்தில் தான் பேசியே திருத்திய பிரகாஷ் ராஜ் பையனுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார். ஆனால் கல்யாணத்திற்கு முதல் நாள் கீர்த்தியை காணவில்லை. தங்கையை மீது பாசமான அண்ணன் அவருக்கே…
Read More
ஊர்குருவியாகும் நடிகர் கவின்!

ஊர்குருவியாகும் நடிகர் கவின்!

  Rowdy pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்து பல ஆச்சர்யமான படைப்புகளை அறிவித்து வருகின்றனர். உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் “கூழாங்கல்” மற்றும் இரத்தமும் சதையுமாக, அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள “ராக்கி” ஆகிய படங்கள் Rowdy pictures சார்பில் வெளியீட்டுக்கு தயராகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது புதிய படைப்பாக “ஊர்குருவி” படத்தினை அறிவித்துள்ளது. ஒரு புறம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ இன்னொரு புறம் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘ராக்கி’ என இரு வித்தியாசமான படைப்புகளை வெளியிடும் இந்நிறுவனம் முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக “ஊர்குருவி” படத்தினை உருவாக்கவுள்ளது. சமீபத்திய வெளியீடான “லிப்ட்” படம் மூலம் மிகச்சிறந்த நடிகர் என பாரட்டுக்களை குவித்து, வெற்றி பெற்றிருக்கும், நடிகர் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி…
Read More
அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ”சார காற்றே” என்ற இந்த பாடலை பிரபல பாடகர்கள் சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர். அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மறைந்த பாடகர் எஸ்பிபி பாடிய பாடல் என்பதால், இந்த பாடலை ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு காத்திருந்து, கேட்டு ரசித்தனர். இந்நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பதால், படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.. இத்தகைய சூழ்நிலையில் அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். டி இமான் இசையமைக்கு அண்ணாத்த படத்தின் இந்த…
Read More
நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்

நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்

  கவின், விக்னேஷ் சிவன் உடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் " காத்துவாக்குல ரெண்டு காதல்". விக்னேஷ் சிவன் இயக்கம் மட்டுமல்லாது, நயன்தாரா உடன் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்லாது, விஜய் டிவி தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வந்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான " லிப்ட்" திரைப்படம் விமர்சகர் இடத்தில் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கவினுடன்- பிகில் திரைப்பட தென்றல் அமிர்தா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். அந்த நிறுவனத்தில் பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களது தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்.…
Read More
விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது. படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம். இளைஞர்களை ஈர்க்கும் பக்கா எண்டர்டெய்ன் மெண்ட் சினிமாக் களைத் தரும் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். மேலும் படத்தின் வெற்றிக்கு இப்பவே உத்திரவாதம் தருவது போல படத்தின் இசைப் பணியை அனிருத் துவங்கியிருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் ஸ்ட்ராங்க் எண்டெர்மெயிண்ட் விசயங்களோடு…
Read More
ஒரே நாளில் பிரமாண்டமான கிளைமாக்ஸ் ஷூட் – மூக்குத்தி அம்மன் டீம் ஹேப்பி!

ஒரே நாளில் பிரமாண்டமான கிளைமாக்ஸ் ஷூட் – மூக்குத்தி அம்மன் டீம் ஹேப்பி!

லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளைமாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை படமாக்குவது இயக்குநர்கள் குழு RJ பாலாஜி, NJ சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். யாருமே எதிர்பாராவகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட இக்காட்சியை படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. பொது முடக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ள நிலையில்,…
Read More